பெங்களூரு:’கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில், மகளிர் பிரிவு கால்பந்தாட்ட போட்டியில், தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை பல்கலை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான 2வது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் மகளிர் பிரிவு கால்பந்தாட்ட போட்டியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை அணி, முதல் போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலையை 4 – 0 என்ற கோல் கணக்கிலும்; மதுரை காமராஜர் பல்கலையை 5 – 0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தது.
இதன் மூலம், மொத்த புள்ளிகள் கணக்கில், இரண்டாம் இடம் பெற்று, அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த குருநானக் தேவ் பல்கலையுடன், அண்ணாமலை பல்கலை அணி நேருக்கு நேர் மோதவுள்ளது. அண்ணாமலை பல்கலை கேப்டன் மாளவிகா தலைமையிலான அணியினர், பயிற்சியாளர் ராஜசேகரன் அறிவுரைப்படி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:’கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில், மகளிர் பிரிவு கால்பந்தாட்ட போட்டியில், தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை பல்கலை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கர்நாடக மாநிலம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.