ஆந்திரா: ஆந்திராவில் பணி முடித்து விட்டிற்கு பைக்கில் சென்ற விமானப் பணிப்பெண்ணிடம் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து கட்டையால் தர்ம அடி கொடுத்து பாடம் புகட்டிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அடுத்த கண்ணவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பணி முடிந்து இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்தை இடைமறித்த இளைஞர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் வாகனத்தை நிறுத்தி கீழே கிடந்த கட்டையை எடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை தாக்கினார். உங்களைப் போன்றவர்கள் உள்ள காரணத்தினால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது என்றும் எதற்காக என்னை வழிமறித்து சில்மிஷம் செய்தாய் என்றும் கேட்டவாறு சராமாரியாக அடித்தார். வலி தங்காமல் அந்த இளைஞர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் வீடியோ காட்சிகளை பார்த்த ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவி வசிரெட்டி பத்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெண் ஊழியரின் தைரியத்தை பாராட்டியுள்ளார். பெண்கள் தங்களை சீண்டுபவர்களுக்கும் தொல்லை அளிப்பவர்களுக்கு இதுபோன்று பாடம் புகட்டுவது அனைருக்கும் வர வேண்டும் ஆபாத்து காலத்தில் அடுத்தவரை எதிர்பார்பதை காட்டிலும் தன்னை எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பலர் அந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.