புதுவை:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் பன்னாட்டு நகரம் அமைக்க அனுமதி பெறுவது குறித்த விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
அதில், மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது.
ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கட்டப்படும் அனைத்துக் கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ன் கீழ் அனுமதி பெறுவது அவசியம் என தீர்ப்பளித்தது.
இதையும் படியுங்கள்…31 பைசா கடன் பாக்கி – விவசாயியை துன்புறுத்திய வங்கி