இந்த கெமிக்கல் பங்கு நல்ல லாபம் தரலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான பரிந்துரை..!

பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகை பங்குகளை தேர்வு செய்வர். அதனை தேர்வு செய்வதிலும் பல வகையான காரணிகளை ஆய்வு செய்து தான் வாங்குவார்கள்.

எனினும் நிறுவனம் என்ன செய்கிறது? அதன் லாபம் எவ்வளவு? முந்தைய செயல்பாடு என்ன? இனி எப்படி இருக்கும்? நிறுவனம் எந்த துறையை சேர்ந்தது? அதற்காக தேவை எப்படியிருக்கும் என பல பொதுவான காரணிகளை கவனிக்க வேண்டும்.

இது தவிர இன்னும் பல முக்கிய முக்கிய விஷயங்களும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. அது பங்குக்கு பங்கு மாறுபடும். நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் தீபக் பெர்டிலைசர்ஸ் அன்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன்.

ரூ.17 டூ ரூ.185.. மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்த ஜுவல்லரி பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

இப்பங்கினை வாங்கி வைக்கலாம்

இப்பங்கினை வாங்கி வைக்கலாம்

இந்த பங்கினை ஆனந்த ரதி நிறுவனம் தீபக் பெர்டிலைசர்ஸ் அன்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது.ஏன்? வாருங்கள் பார்க்கலாம்.

இதன் இலக்கு விலையாக 810 ரூபாயினை கொடுத்துள்ளது. இந்த மல்டிபேக்கர் பங்கு விலையானது ஒரு ஆண்டில் 160% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 70% ஏற்றம் கண்டுள்ளது.

வளர்ச்சி காணலாம்

வளர்ச்சி காணலாம்

இந்த நிறுவனம் வளர்ச்சி விகிதத்தினை மேம்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தில் CAPEX விகிதமானது மேம்படலாம் என்று தரகு நிறுவனம் கணித்துள்ளது.

தீபர் பெர்டிலைசர் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேட் லிமிடெட் உரங்கள் மற்றும் தொழில் துறை கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

நிறுவனம் என்ன செய்கிறது?
 

நிறுவனம் என்ன செய்கிறது?

கடந்த 1979ம் ஆண்டில் அம்மோனியா உற்பத்தியாளராக தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது தொழிற்துறைக்கு தேவையான கெமிக்கல்கள், சிற்ப்பு உரங்கள், விவசாய பயிர் நோய் கண்டறிதல் மற்றும் அதற்கான தீர்வுகள், தொழில் நுட்ப அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட பலவற்றை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

தீபர் பெர்டிலைசர் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேட் லிமிடெட் பங்கு விலையானது, பி.எஸ்.இ-யில் 2.25% அதிகரித்து, 674.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 724.80 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 253.10 ரூபாயாகவும் உள்ளது.

இதே பங்கின் விலையானது பி.எஸ்.இ-யில் 2.01% அதிகரித்து,672.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 730 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 253.40 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

anand rathi recommends to buy this multibagger stock

anand rathi recommends to buy this multibagger stock/இந்த கெமிக்கல் பங்கு நல்ல லாபம் தரலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான பரிந்துரை..!

Story first published: Friday, April 29, 2022, 19:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.