சென்னை:l
தீர்மானத்தின் மீது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, நாகை மாலி, ஷானவாஸ், நயினார் நாகேந்திரன், ஜி.கே.மணி, செல்வபெருந்தகை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினார்கள்.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
இந்த வரலாற்று சிறப்பு மிக்க, மனிதநேய மிக்க தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், உறுப்பினர்கள் வரவேற்று, ஆதரித்து பேசியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்க கூடிய இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டு மக்களுக்கு இன்னும் உதவி தேவை என்றால் அடுத்த கட்டமாக உதவி செய்யவும் தமிழக அரசு என்றைக்கும் தயாராக உள்ளது. அது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்டோரும் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தால் அவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றிய அரசு மூலமாக இலங்கை மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.