உக்ரைனிலிருந்து இரகசியமாக உணவைத் திருடும் புடினுடைய கேவலமான திட்டம் லீக்கானது


உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகள் காரணமாக அந்நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகி வரும் நிலையில், தான் போர் தொடுத்துள்ள உக்ரைனிலிருந்து உணவைத் திருட புடின் இரகசியத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Krasnoyarsk நகரைச் சேர்ந்த புடின் ஆதரவு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான Vladislav Zyryanov என்பவர், தங்கள் சட்டசபையின் இணையதளத்தில் இது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது, உக்ரைனின் தெற்கு பகுதிகளிலிருந்து, அதாவது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் நகரங்களிலிருந்து உணவுப்பொருட்களை ரஷ்யாவுக்குக் கொண்டு வருவதன் மூலம், ரஷ்ய மக்களின் உணவுத் தேவைகளை சந்திக்க கிரெம்ளின் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற ரஷ்ய நகரங்களும் இதே திட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம் என அவர் பரிந்துரையும் செய்துள்ளார்.

அத்துடன், ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு விதைகள் மற்றும் உரம் வழங்குவதை பல நாடுகள் நிறுத்திக்கொண்டுள்ளதால், இப்படி உக்ரைனிலிருந்து உணவுப்பொருட்களை கைப்பற்றும் செயல் பொருளாதார ரீதியில் நியாயமானதே என்றும் Zyryanov தெரிவித்துள்ளார்.

இந்த Zyryanov சைபீரியாவிலுள்ள Krasnoyarsk பகுதி சட்டமன்ற விவசாயக் கமிட்டியின் தலைவர் ஆவார்.

இதற்கிடையில், Zyryanov கூறிய விடயங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அந்த செய்தி Krasnoyarsk சட்டசபையின் இணையதளத்திலிருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டுவிட்டது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.