ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
உக்ரைனுக்கு உதவி மற்றும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைக்கு அதிபர் ஜோபைடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரியிருந்தார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.