உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ராக்கெட் தயாரிப்பு ஆலையின் உற்பத்தி மையங்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தலைநகரில் மீண்டும் தாக்குதலை அதிகரித்துள்ள ரஷ்ய படைகள், நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி அங்குள்ள ஆர்டெம் ராக்கெட் மற்றும் விண்வெளி தொழில் நிறுவனத்தின் உற்பத்தி மையங்களை தாக்கி அழித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.