திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 5 வயது சிறுமி உட்பட 3 பெண் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அணையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆகியோரின் உடல்கள் மிதப்பதாக தளி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் உடல்களை மீட்ட போலீசார், கொலையா, தற்கொலையா, மூவரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.