தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டிய அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த டிவி நடிகை சித்ராவின் கணவர் காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்க்யிருந்தபோது தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். இதற்கு அவரது கணவரான ஹேம்நாத்தான் காரணம் என புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் டிசம்பர் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கபட்டார்.
இந்நிலையில், தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்களால், தனக்கும் ஆபத்து இருப்பதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் தற்போது கோரிக்கை மனு அளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM