உலக முழுவதும் எதிர்பார்க்கும் டிவிட்டர் – எலான் மஸ்க் கைப்பற்றல் திட்டம் வெறும் வர்த்தக ஒப்பந்தம் இல்லை, மக்களை ஆட்டிப்படைத்து வரும் சமுக வலைத்தளத்தை மொத்தமாக மாற்றமும் ஒரு புரட்சி, அனைத்திற்கும் மேலாக பேச்சு சுதந்திரம் சமுக வலைத்தளத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றுவதன் மூலம் இவை அனைத்தையும் மொத்தமாக மாற்றப்படும் என நம்பப்படுகிறது.
ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்ற சுமார் 44 பில்லியன் டாலர் அளவிலான தொகையை திரட்ட வேண்டும். இதற்காக எலான் மஸ்க் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்வார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எலான் மஸ்க் புதிய பல்டியை அடித்துள்ளார்.
புலி வாலை பிடித்த எலான் மஸ்க்.. விட்டா அவ்வளவு தான் ரூ.7600 கோடி ஸ்வாகா..!
டெஸ்லா நிறுவனம்
டிவிட்டர் நிர்வாக குழு டெஸ்லா நிறுவனத்தை மொத்தமாக எலான் மஸ்கிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்த பின்பு எலான் மஸ்க் சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதில் என்ன இருக்கு என்று தானே கேட்குறீங்க, இதுக்கு பின்பு டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்ய மாட்டார் என அறிவித்துள்ளார்.
44 லட்சம் பங்குகள் விற்பனை
ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய இரு நாட்களில் 5 பிரிவுகளாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தன்னிடம் இருக்கும் டெஸ்லா பங்குகளில் சுமார் 44 லட்சம் பங்குகளை சுமார் 4 பில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான அறிக்கையை அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையமான SEC-யிடம் சமர்ப்பித்துள்ளது.
இனி விற்கப்போவது இல்லை
இந்நிலையில் தனது டிவீட்டில் இனி டெஸ்லா பங்குகளை விற்கப்போவது இல்லை என் வெளிப்படையாக டிவீட் செய்துள்ளது. ஏற்கனவே தன்னிடம் இருக்கும் 3 பில்லியன் டாலர் நிதி மற்றும் தற்போது 44 லட்சம் பங்குகளை விற்பனை மூலம் கிடைத்த 4 பில்லியன் டாலர் உடன் சேர்த்தால் 7 பில்லியன் டாலர் அளவிலான தொகை மட்டுமே உள்ளது.
44 பில்லியன் டாலர் எப்படி??
இதன் மூலம் 44 பில்லியன் டாலருக்கு எப்படி டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றுவார் என்பது முக்கிய கேள்வியாக இருக்கும் நிலையில், இந்த மாபெரும் ஒப்பந்தத்திற்கு எலான் மஸ்க் 21 பில்லியன் டாலர் மட்டும் திரட்டினால் போதுமானது. மீதமுள்ள தொகை முதலீட்டாளர்கள் அல்லது முதலீட்டு நிறுவன கூட்டணி மூலம் பூர்த்தி செய்ய முடியும்.
பங்குகள் அடைமானம்
21 பில்லியன் டாலரில் 7 பில்லியன் டாலர் தொகை தற்போது எலான் மஸ்க் கையில் இருக்கும் நிலையில், மீதமுள்ள 14 பில்லியன் டாலர் தொகைக்கு டெஸ்லா பங்குகளை விற்காமல், அடைமானம் வைத்து நிதி திரட்ட உள்ளார் எலான் மஸ்க். இதனால் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றுவது உறுதி. சமுக வலைத்தளத்தின் மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகுங்கள்.
Elon Musk sold $4 billion of Tesla shares; tweets done selling for Twitter buyout deal
Elon Musk sold $4 billion of Tesla shares; tweets done selling for Twitter buyout deal எலான் மஸ்க்-ன் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது.. டிவிட்டரை கைப்பற்ற முடியுமா..?