கதீஜாவ மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணிட்டு… கண்மணிய விட்டுட்டீங்களே.. விக்கியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. வெப் சீரிஸ்களில் நடித்து வரும்
சமந்தா
படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார் சமந்தா.

ஊ அண்டவா என்ற அந்த பாடல் உலக அளவில் பெரும் ஹிட்டானது. டிவிட்டரில் வியூஸ்களையும் வாரி குவித்தது. இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் படத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏன் மேடம் போனீங்க? அதையே கேட்டு ஐஸ்வர்யாவை தர்ம சங்கடமாக்கும் தனுஷ் ஃபேன்ஸ்!

தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.

இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடித்திருந்தனர். நயன்தாரா கண்மணி என்ற கதாப்பாத்திரத்திலும் சமந்தா கதீஜா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நேற்றிரவு சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார் விக்னேஷ் சிவன்.

அச்சச்சோ… பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் சவுந்தர்யா… இனி இவர்தானாம்!

அதனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு மட்டுமே ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், கதீஜாவை மட்டுமே கான்சென்ட்ரேட் பண்ணிவிட்டு கண்மணியை விட்டுவிட்டீர்கள் என்றும் விக்னேஷ் சிவனை விளாசி வருகின்றனர். இன்னும் சிலர் பிறந்தநாளே முடிய போகுது இப்போது வாழ்த்தா என்றும் கேட்டு பங்கம் பண்ணியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.