கலவரம் எதிரொலி – பாட்டியாலாவில் ஊடரங்கு உத்தரவு

பாட்டியாலா:
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினர் இடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இடையே மோதல் நிலவியது. 
தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் சிறிது நேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 
இதையடுத்து அங்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. 
இதுதொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பகவந்த் மான் கூறுகையில், பஞ்சாப்பில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. மாநிலத்தில் பொது அமைதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை கண்கானிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், கலவரம் ஏற்பட்டதன் எதிரொலியாக பாட்டியாலாவில் ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 7 மணி முதல் அமலாகிறது. நாளை காலை 6 மணி வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.