மதுரை: ஊராட்சி பணிகளுக்கு கலெக்டர் மூலம் இ-டெண்டர் விடும் அரசாணையை ரத்து செய்ய கோரி சிவகங்கை மாவட்ட அனைத்து ஊராட்சித் தலைவர்கள் நல சங்கத்தலைவர் முனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, மனு மீதான விசாரணையை விடுமுறை கால அமர்வுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.