நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவியை இளைஞன் கத்தியால் குத்திய சம்பவத்தில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் அவன் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.
குன்னூரைச் சேர்ந்த அந்த மாணவி, காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பெட்போர்டு சாலை அருகே, மாணவியை வழிமறித்த குன்னூரைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.
ஆஷிக்கை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தன்னைக் காதலிக்குமாறு கூறி, அவரைக் கடந்த 6 மாதங்களாக ஆஷிக் தொல்லை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவனது காதலை ஏற்க மாணவி மறுத்து வந்த நிலையில், மாணவியின் உறவினர்களும் ஆஷிக்கை கண்டித்து வந்துள்ளனர்.
அந்த ஆத்திரத்தில் ஆஷிக் மாணவியை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.