கொரோனா பரவல் வேகமெடுக்குமா? ஐ.சி.எம்.ஆர்., ஆராய்ச்சியாளர் தகவல்!| Dinamalar

புதுடில்லி : “புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் உருவாகவில்லை. எனவே, நம் நாட்டில் வைரஸ் பரவல் வேகமெடுக்க வாய்ப்பில்லை,” என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் நிவேதிதா குப்தா தெரிவித்துள்ளார்.

ஆறாம் அலை

நம் நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், வைரஸ் ஆய்வு பிரிவின் தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா நேற்று கூறியதாவது:

இந்தியாவில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு செலுத்தப்படும் ‘கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்’ தடுப்பூசிகளால் தான், இது சாத்தியமானது. ஹாங்காங், கனடா நாடுகளில், கொரோனா பரவலின் ஐந்து மற்றும் ஆறாம் அலை சென்று கொண்டிருக்கிறது.

latest tamil news

இந்த நாடுகளில், கொரோனாவை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்படாதது தான் இதற்கு காரணம். ‘பூஸ்டர் டோஸ்’நம் நாட்டில், ஒமைக்ரான் வகைகளை தவிர, மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் பரவவில்லை. எனவே, வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்பில்லை. எனினும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை நாம் முறையாக கடைப்பிடிக்க வேண்டியது

அவசியம்.’பூஸ்டர்’ டோஸ்களை, குறைவான மக்களே செலுத்திக் கொள்கின்றனர். இது, நல்ல அறிகுறி அல்ல. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ்களை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.