கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு செலுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீரம் நிறுவனத்தின் அந்த தடுப்பூசியை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவசர காலத்தில் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
நாட்டில் மார்ச் முதல் 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறார்களுக்கான மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 5 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது