தமிழ்நாட்டில் சார் பதிவாளர் அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாள்கள் செயல்படும் என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். துறையின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அதிக எண்ணிக்கையில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் முதல்கட்டமாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவுகளை செய்ய விரும்புவோருக்காக தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.
சமீபத்திய செய்தி: நிலக்கரி விநியோகம்: 670 பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்தது ரயில்வே
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM