சிவகார்த்திகேயன்
நடிப்பில் உருவாகி வரும் “டான்” படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில்
டான்
திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை அட்லீயிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த
சிபி
சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.
நடிகை
பிரியங்கா
மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு
அனிருத்
இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.இந்தப் படம் மே 13 அன்று வெளியாக உள்ளது.
மரண பயம் தெரியுதே: அஜித் ரசிகர்களை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!
டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின்
ரெட் ஜெயன்ட்
மூவீஸ் கைப்பற்றியுள்ளது.தற்போது டான் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அனிருத் மற்றும்
ஜோனிடா
காந்தி இருவரும் பாடியுள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் துள்ளலான நடனமாடும் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.இதே கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல், பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!