ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா நகரத்தில் உள்ள உப்லோனாவின் தலைமையகமான செக்டார் 10 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் மற்றும் தலைமையக எதிர்கிளர்ச்சிப் படை சார்பில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களின் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த பின்னர் 42 பேர் இப்தார் விருந்தில் பங்கேற்றனர். இவர்களுடன் குஜ்ஜர் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களும் இப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, உப்லோனாவின் மௌலவி நமாஸ் செய்து, திருக்குரானின் போதனைகளை வாசித்து, சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு அனைவரும் அவற்றைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உப்லோனா ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி கூறுகையில், “உப்லோனா மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீரில் வளரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு உப்லோனா மக்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக பாராட்டுகிறேன். இந்திய ராணுவத்தின் தொடர்ச்சியான ஆதரவு மக்களுக்கு என்றும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
இதையும் படியுங்கள்.. ஜம்மு காஷ்மீர் ரியாசியில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ