டிவிட்டரில் பணிநீக்கம்.. ஊழியர்களை கதறவிட்ட எலான் மஸ்க்.. ஆரம்பமே அமர்க்களம்..!

டிவிட்டரை கைப்பற்றுவதற்கான பணத்தை திரட்ட 4 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ள எலான் மஸ்க். மீதமுள்ள தொகைக்கு டெஸ்லா பங்குகளை அடைமானம் வைத்தும், டிவிட்டரின் மீதும் கடன் வாங்க உள்ளார்.

டிவிட்டர் பெயரில் கடன் வாங்குவது என்பது ஈசி இல்லை, குறிப்பாக நிர்வாக மாற்றம் நடைபெறும் இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டும் என்றால், புதிய நிர்வாகத்தின் கீழ் நிறுவனம் எப்படி இருக்கும் என திட்ட வடிவத்தை கொடுக்க வேண்டும்.

அப்படி எலான் மஸ்க் கொடுத்த திட்ட வடிவத்தில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமும், வியப்பு அளிக்கும் ஒரு விஷயமும் உள்ளது.

எலான் மஸ்க்: 44 பில்லியன் டாலர்.. பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் டிவிட்டர்..!

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பே எலான் மஸ்க் தான் டிவிட்டரை கைப்பற்றினால் டிவிட்டர் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 0 டாலர் சம்பளம் மட்டுமே அளிப்பேன் இதன் மூலம் வருடத்திற்கு 3 மில்லியன் டாலர் சேமிக்க முடியும் என தெரிவித்தார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்நிலையில் டிவிட்டர் வாங்க தயாராகியுள்ள எலான் மஸ்க் சும்மா இருப்பாரா என்ன..? டிவிட்டர் நிறுவனத்தின் பெயரில் கடனை வாங்க வங்கிகளிடம் சமர்ப்பித்த திட்டத்தில் எலான் மஸ்க டிவிட்டர் ஊழியர்கள் பணி நீக்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும் டிவிட்டர் நிறுவனத்தின் பணிநீக்கம் அனைத்தும் எலான் மஸ்க் கைப்பற்றிய பின்பு தான் நடக்கும்.

 ஊழியர்கள் பணிநீக்கம்
 

ஊழியர்கள் பணிநீக்கம்

இந்த ரகசிய தகவல் வெளியானதில் இருந்து டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான பயம் உருவாகியுள்ளது. அனைத்திற்கும் மேலாக பல ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் வேலையை தேட துவங்கியுள்ளனர், பலர் எலான் மஸ்க்-ன் முடிவு தவறு எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

வருமானம்

வருமானம்

இதேவேளையில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு எலான் மஸ்க்-கிற்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் அது கட்டாயம் வருவாய் ஈட்டுவது தான். டிவிட்டரின் சக போட்டி நிறுவனமான பேஸ்புக், Pinterest ஆகியவை அதிகப்படியான லாபத்தில் இயங்கி வரும் நிலையில் டிவிட்டர் மிகவும் குறைவான லாபத்திலும், வருமானத்திலும் இயங்கி வருகிறது.

புதிய வழி

புதிய வழி

டிவிட்டர் நிறுவனத்திற்கு அதிகப்படியான வருவாயை ஈட்ட திட்டமிட்டு சில முக்கியமான திட்டத்தை வங்கிகளுக்கு முன்வைத்துள்ளார் எலான் மஸ்க். முக்கியமான தகவல்களைக் கொண்ட அல்லது வைரலாகும் ட்வீட் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழியை முன்வைத்துள்ளார்.

எம்மெட் கட்டணம்

எம்மெட் கட்டணம்

அதாவது முக்கியமான தகவல்களைக் கொண்ட அல்லது வைரலாகும் ட்வீட்-ஐ 3ஆம் தரப்பு நிறுவனங்கள் அல்லது தனிநபர் எம்மெட் அல்லது குறிப்பிட வேண்டும் என்றால் அதற்கு கட்டணத்தை வசூலிக்க முறையை முன்வைத்துள்ளார்.

2.99 டாலர் எடிட் சேவை

2.99 டாலர் எடிட் சேவை

இதேபோல் தவறான டிவீட் அல்லது மாற்று கருத்து கொண்ட டிவீட்டை மாற்ற வேண்டும் என்றால் தற்போது டெலிட் செய்து விட்டு புதிய டிவீட்டை-ஐ தான் செய்ய வேண்டும். இதை மாற்றும் வகையில் எடிட் சேவையை மாதம் 2.99 டாலர் தொகையில் ப்ளூ டிக் கொண்டு கணக்குகளுக்கு அளிக்கும் திட்டத்தையும் எலான் மஸ்க் முன்வைத்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk plans for Job cut in twitter; Musk’s pitching banks with new ways to make Money

Elon Musk plans for Job cut in twitter; Musk’s pitching banks with new ways to make Money டிவிட்டரில் பணிநீக்கம்.. ஊழியர்களை கதறவிட்ட எலான் மஸ்க்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.