டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக கோயிலில் கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயில்களுக்கு பண வசூலுக்கான கையடக்க கருவிகள் (ஸ்வைப்பிங் இயந்திரம்) வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 550 கோயில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை கோயில் இணை ஆணையர்களிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சேவை முன்பதிவு வசதியை எளிமைப்படுத்தும் வகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி, வடபழனி ஆண்டவர் உள்ளிட்ட கோயில்களுக்கு 1,500கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. டெபிட், கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வசதிவிரைவில் அறிமுகம் செய்யப்படும்.

சென்னை அயோத்தியா மண்டபத்தை பொருத்தவரை, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறநிலையத் துறை செயல்படும். அடுத்தகட்ட நடவடிக்கையாக, சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து முதல்வரிடம் கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும். அதிகமாக பக்தர்கள் கூடும் தேர் திருவிழாக்களில் சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். துறைஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.