சென்னை:
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 27-ம் தேதி அதிகபட்சமாக 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினம் ஒரே நாளில் 387 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.