தாவணி போட்ட தீபாவளியே – டெல்னா டேவிஸ் க்யூட் க்ளிக்ஸ்
மலையாள தேசத்து நடிகையான டெல்னா டேவிஸ் தமிழ் திரையுலகில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான 'குரங்கு பொம்மை' திரைப்படத்தை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதற்கிடையில் சின்னத்திரை வாய்ப்பு அவருக்கு பிடித்து போகவே தற்போது 'அன்பே வா' என்ற தொடரில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தாவணி அணிந்து அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் இளசுகள் 'தாவணி போட்ட தீபாவளி' என பாட்டு பாடி டெல்னா டேவிஸின் புரொபைலை மொய்த்து வருகின்றனர்.