கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் ஓசூரில் அலங்கார பூக்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
அவர் காரில் தனது சகோதரருடன் ஓசூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது சப்படி என்ற இடத்தில் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது.
உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இருவரும் இறங்கிய சற்று நேரத்திலேயே இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள்ளாகவே கார் முற்றிலுமாக எரிந்து கருகிய நிலையில், சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.