நெருக்கடியில் தவிக்கும் இலங்கை! உதவிக்கரம் நீட்டும் தமிழகம் – சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்



நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்
இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய
மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக
சட்டப் பேரவையில் இன்று (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில்
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு
சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள்,
எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான உதவிகளை தான் முதலில் அறிவித்ததாகவும், அதற்குப் பதிலாக பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள்
ஒரு சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கை முழுவதற்குமான உதவிகளை வழங்குமாறு தன்னிடம்
கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி காரணமாக அனைத்து குடிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள
நிலையில், பிரிவினை மூலம் இலங்கை மக்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என அவர்கள்
தன்னிடம் தெரிவித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்திய ரூபாய் 80 கோடிக்கு 40,000 டன் அரிசியும், இந்திய ரூபாய் 28 கோடிக்கு 137 உயிர் காக்கும் மருந்துகளும், 15 கோடி ரூபாய்க்கு 500 கிலோ பால் மின்சாரமும் மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

“இருப்பினும், தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. தமிழகம் முதலில் மத்திய
அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே விநியோகிக்க வேண்டும்’’
எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.
எனவே, தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.