சென்னை: எம்.ஜி.ஆர் நடித்த ‘விவசாயி’ படத்தில் அறிமுகமான ரங்கம்மாள் பாட்டி (83), தொடர்ந்து சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், அஜித் குமார் உள்பட அனைத்து நடிகர்களின் படங்களில் நடித்தார். கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த அவர், வடிவேலு உள்பட பல காமெடி நடிகர்களுடன் நடித்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும்வறுமையால் அவதிப்பட்ட அவர், 2018ல் சென்னை மெரினா கடற்கரையில் கர்ச்சீப் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் பாட்டி நேற்று காலமானார்.