பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார். அவருக்கு வயது 83.
புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் விவசாயி படத்தில் அறிமுகமான ரங்கம்மா பாட்டி, எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோரின் பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக காமெடி நடிகரான வடிவேலுவின் பல காமெடிகளில் நடித்து பிரபலமான ரங்கம்மா பாட்டி, அண்மை நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவதியுற்று வந்தார்.
இந்நிலையில், கோவை தெலுங்கபாளையத்தில் உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்த அவரது உயிர் பிரிந்தது.