Courtesy: NDTV
இந்திய மாநிலம் பீகாரில், புகார் அளிக்கச் சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் பொலிஸாருக்கு மசாஜ் செய்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பீகாரில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தின் சஹர்சா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நௌஹட்டா காவல் நிலையத்தின் தர்ஹார் அவுட்போஸ்ட்டில் மூத்த அதிகாரியான சஷிபூஷன் சின்ஹா, சட்டை அணியாமல் வெறும் உடம்பில் ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்துகொண்டே போனில் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ பொலிஸ் அவுட்போஸ்டில் உள்ள குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சஹர்சா காவல்துறை கண்காணிப்பாளர் லிபி சிங் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார்.
தகவல்களின்படி, அந்தப் பெண் தன் மகனை சிறையில் இருந்து விடுவிக்க காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது சசிபூஷன் சின்ஹா தன்னை மசாஜ் செய்யும்படி கூறியதாக கூறப்படுகிறது. அவர் தனது மகன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று உறுதியளித்தார்.
அந்தப் பெண் அவருக்கு தொடர்ந்து மசாஜ் செய்ததால், சசிபூஷன் சின்ஹா ஒரு வழக்கறிஞரை அழைத்து, அப்பெண்ணின் மகனை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டதாக்க கூறப்படுகிறது.