பாவேந்தர் பாரதிதாசனின் 132வது பிறந்த தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதிதாசனின் சிலைக்கு அரசு சார்பில் துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என பாரதிதாசன் கூறியிருப்பதாகவும், அவரது விருப்பத்திற்கிணங்க புதுச்சேரி முழுவதும் அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.