பெண் உறுப்பினர் அருகிலேயே ஆபாச படம் பார்த்த எம்.பி இவர் தான்: அவர் மனைவி கூறிய ஒற்றை வார்த்தை


பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் பக்கத்தில் இருக்கும்போதே ஆபாச படம் பார்த்து சிக்கியவர் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பியான Neil Parish என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில்,
அவரது மனைவி, நடந்த சம்பவம் மிகவும் சங்கடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 40 ஆண்டுகளில் தமது கணவர் இதுபோன்ற செயல்களைச் செய்திருப்பதாக தமக்கு முற்றிலும் தெரியாது எனவும் சூசன் பாரிஷ் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், குறித்த சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டதும், ஒருகணம் எனது மூச்சே நின்றுவிடும் போல இருந்தது என தெரிவித்துள்ளார் சூசன்.

அதுபோன்ற ஒரு சூழலில் இவ்வாறு அவர் கண்டிப்பாக நடந்து கொண்டிருக்க கூடாது என குறிப்பிட்டுள்ள சூசன்,
பெண் உறுப்பினர்கள் மனவருத்தத்திற்கு உள்ளானதில் தமக்கு வியப்பில்லை எனவும், எவ்வாறான சூழலில் தமது கணவர் ஆபாச படம் பார்த்தார் என்பது குறித்து தமக்கு எதுவும் பிடிபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் பாரிஷ் தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், உண்மை என்ன என்பது கடவுளுக்கு தெரியும் என மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, விசாரணை முடியும் மட்டும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.