இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்று. ஆக சர்வதேச சந்தைகளில் ஏற்படும் தாக்கம் இந்தியாவில் மிக மோசமாக உடனடியாக உணரப்படும் ஒரு விஷயம்.
அந்த வகையில் இந்தோனேசியாவின் பாமாயில் தடை அறிவிப்பானது எந்த மாரியான பிரச்சனைகளை ஏற்படுத்த போகிறதோ? தெரியவில்லை என்ற பெரும் அச்சம் நிலவி வருகின்றது.
உள்நாட்டில் நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக, ஏற்றுமதியினை தற்காலிகமாக தடை செய்துள்ளது இந்தோனேசியா.
பாமாயில் ஏற்றுமதி தடையில் முக்கிய மாற்றம்.. இந்தோனேசியா புதிய அறிவிப்பு..!
சன்பிளவர் ஆயில் விலை ஏற்றம்
ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனை காரணமாக சன் பிளவர் ஆயில் இறக்குமதி தடையால், சமையல் எண்ணெய் விலையானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தோனேசியாவின் இந்த தடை அறிவிப்பால் இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
எப்போது தடை முடிவுக்கு வரும்
இதற்கிடையில் இந்தோனேசியா தற்காலிகமாக தடையை விதித்து இருந்தாலும், எப்போது மீண்டும் திரும்ப ஏற்றுமதியினை வழக்கம்போல செய்யும் என்பதும் தெளிவாக இல்லை. இத்தகைய சூழலில் எண்ணெய் விலை என்னவாகுமோ என்ற கவலை இருந்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கலாம் என்றும், மே இறுதியில் முடிவுக்கு வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது தடை நீக்கம்
எப்படியிருப்பினும் இன்னும் சில வாரங்களுக்கு விலையேற்றம் என்பது நிச்சயம் மக்களை ஆட்டிப்படைக்கலாம் என்பது மட்டும் தெளிவாகிறது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் அடுத்த சில வாரங்களில் இந்தோனேசியா, அதன் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். மே மாதத்தின் இறுதியில் இருந்து பாமாயில் மற்றும் அதன் சுத்திகரிக்கரிப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி தடையை நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்கத்தினை ஏற்படுத்தலாம்
உலகின் சிறந்த பாமாயில் உற்பத்தியாளரான இந்தோனேசியாவின் இந்த முடிவு, தொழில் துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என இந்தோனேசியாவின் பாமாயில் வாரியத்தின் மூத்த அதிகாரி சஹாத் சினகா தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதிப்பு
ஏற்கனவே பல அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், பாமாயில் விலை அதிகரிப்பு மேற்கோண்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது இதுவரையில் தெளிவாக கூறப்படவில்லஒ. ஏற்கனவே உக்ரைன் பிரச்சனையானது இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என்ற சூழலே இருந்து வருகின்றது. இந்த நிலையில் இந்தோனேசியாவும் தடை செய்துள்ளது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
Indonesia industry body confident palm oil Export ban could end in may
Indonesia industry body confident palm oil Export ban could end in may/பெரும் பிரச்சனை.. தலைக்கு வந்தது தலைபாகையுடன் செல்கிறதா.. இந்தியாவுக்கு ஆறுதல் கிடைக்குமா?