மின்பற்றாக்குறையால் மெட்ரோ ரயில் சேவை முடங்கும் நிலை: டெல்லி அமைச்சர்

மின் தடையால் டெல்லி மெட்ரோ ரயில் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின் தடையால் டெல்லி மெட்ரோ ரயில் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் மின்தேவை அதிகரித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தேவை அதிகரிப்பு காரணமாக மின்தடை ஏற்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக டெல்லி மாநிலத்தில் மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் மின்சாரப் பற்றாக்குறையின் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் மெட்ரோ நிறுவனங்களுக்கு போதுமான அளவு மின்சாரம் வழங்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
Power Supply to Metro Trains, Hospitals Could Be Interrupted Due to Coal Shortage: Delhi Govt
டெல்லியின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதாகவும், 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல் மின் நிலையங்கள் மூடப்படும் நிலை உருவாகும் எனவும் உடனடியாக இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு தலையிட்டு நிலக்கரி தேவையை விரைந்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.