பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்துள்ள ‘ஆச்சார்யா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்களின் வரிசையில் டோலிவுட்டில் உருவான ராம்சரணின் ‘ஆச்சார்யா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அன்னே நேனு என சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கிய கொரட்டாலா சிவாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியதும், கூடுதல் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் எனே நேனு’ என இரண்டு படங்களைக் இயக்கி, அதையும் சூப்பர் ஹிட் ஆக்கினார். அடுத்ததாக மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கிய ‘ஜனதா கரேஜ்’ படமும் வெற்றி பெற்றது. இதுவரை நான்கே படங்களை இயக்கி தெலுங்கின் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரட்டலா சிவா, தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணையும் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இயற்கை பாதுகாக்கும் பசுமைப் போராளிகளாக நடித்துள்ளனர்.
‘ஆச்சார்யா’ திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. உலகம் முழுவதும் இன்று வெளியான ‘ஆச்சார்யா’ திரைப்படம், சென்னையிலும் காலை 5 மணிக்கு வெளியானது.
இதையும் படிங்க… வாலி இந்தி ரீமேக் விவகாரம்: போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி