ரஷ்யாவுக்கு செக் வைத்த ஜெர்மனி.. இனி விளாடிமிர் புதின் பாடு திண்டாட்டம் தான்..!

உக்ரைன் மீதான போருக்கு பின்பு ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் அதிகப்படியான தடைகளை விதித்தது. குறிப்பாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பகிர்வு, விமானம் பறப்பதற்கு, ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் பல பணக்காரர்கள் ஐரோப்பியாவிற்கு நுழைய கூடாது எனத் தடை விதித்தது.

இந்தியாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய நிறுவனங்கள்.. இனி பொற்காலம் தான்..!

எரிபொருள், எரிவாயு

எரிபொருள், எரிவாயு

ஆனால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எரிபொருள், எரிவாயுவை மட்டும் ஐரோப்பிய நாடுகள் நிறுத்தவில்லை. குறிப்பாக ஜெர்மனி தன்நாட்டில் எரிபொருளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் வழக்கத்தை விடவும் அதிகமாக வாங்கி வருகிறது.

ரஷ்யா கச்சா எண்ணெய்

ரஷ்யா கச்சா எண்ணெய்

இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்த நிலையில். தற்போது மிகப்பெரிய குண்டை ஜெர்மனி, ரஷ்யாவுக்குப் போட்டு உள்ளது. இதனால் ரஷ்யா ஒட்டுமொத்த ஐரோப்பிய வர்த்தகத்தையும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஜெர்மனி
 

ஜெர்மனி

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு ஜெர்மனி தயாராகிவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் கூறியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான கதவைத் திறந்துள்ளது.

ஜெர்மனி திட்டம்

ஜெர்மனி திட்டம்

ஜெர்மனி அரசு அதிகாரிகள் மத்தியில் புதன்கிழமை நடத்த முக்கியமான கூட்டத்தில், ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்காமல் இயங்க முடியாத நிலையில் வெளியேற மாற்று வழியைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் இனி ஜெர்மனி ரஷ்ய கச்சா எண்ணெய், எரிவாயு-வை தடை செய்யலாம் என அறிவித்துள்ளது.

ஜெர்மனி - போலந்து ஒப்பந்தம்

ஜெர்மனி – போலந்து ஒப்பந்தம்

ஜெர்மனி அரசு போலந்து உடனான ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பால்டிக் கடலில் உள்ள போலந்து துறைமுகமான க்டான்ஸ்க் மூலம் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, சர்வதேச நாடுகளின் கச்சா எண்ணெய் சப்ளையர்களிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

PCK சுத்திகரிப்பு ஆலை

PCK சுத்திகரிப்பு ஆலை

போலந்து க்டான்ஸ்க் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் நேரடியாக ஜெர்மனி நாட்டின் Schwedt பகுதியில் உள்ள PCK கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சப்ளை செய்ய முடியும். இதன் மூலம் PCK கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்யா கச்சா எண்ணெய்யை முழுமையாகத் தவிர்க்க முடியும்.

விளாடிமிர் புடின் போர்

விளாடிமிர் புடின் போர்

விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போரைத் தொடங்குவதற்கு முன்பு ஜெர்மனியில் பயன்படுத்தும் மொத்த கச்சா எண்ணெய்யில் 35% ரஷ்யா உடையதாக இருந்த நிலையில் தற்போது இதன் அளவு 12% ஆகக் குறைந்துள்ளது என்று ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் இந்த வாரம் தெரிவித்திருந்தார்.

பல்கேரியா மற்றும் போலந்து

பல்கேரியா மற்றும் போலந்து

இதன் மூலம் படிப்படியாக ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதைக் குறைக்க உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை, பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய இரண்டு நாடுகளும் ரூபிள்களில் பணத்தைச் செலுத்த மறுத்த காரணத்தால் ரஷ்யா இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Germany import oil from Poland port; Russia cuts natural gas supply to Bulgaria Poland

Germany import oil from Poland port; Russia cuts natural gas supply to Bulgaria Poland ரஷ்யாவுக்குச் செக் வைத்த ஜெர்மனி.. இனி புதின் பாடு திண்டாட்டம் தான்..!

Story first published: Friday, April 29, 2022, 15:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.