ரஷ்ய கப்பல்களைக் காக்கும் டால்ஃபின் படை; சமூக வலைதளங்களில் வைரல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: ரஷ்ய கப்பல்களைக் சிறப்பு டால்ஃபின் படை தற்காத்து வரும் செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

latest tamil news

அமெரிக்கா கடற்படை இன்ஸ்டிடியூட் தற்போது ரஷ்யாவின் கடல் பாதுகாப்பு குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
காலாகாலமாக மனிதர்களின் உற்ற நண்பர்களாக செயல்படும் உயிரினங்களில் ஒன்று கடலின் அடி ஆழத்தில் வசிக்கும் டால்பின்கள். விலங்குகளை வைத்து வித்தை காட்டுவதை மனிதன் காலகாலமாக செய்து வருகிறான். குரங்கு, நாய் முதல் டால்பின்கள் வரை புத்திசாலித்தனம் அதிகம் உள்ள உயிரினங்களை எளிதாக பல்வேறு வித்தைகளுக்கு பழக்கி வைப்பதை நாம் அறிவோம்.
வளர்ப்பு டால்பின்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் வித்தை காட்டும் உயிரினமாக வளர்க்கப்படும் நிலையில் தற்போது கருங்கடலில் உள்ள டால்பின்களை ரஷ்ய அரசு பாதுகாப்பு படையாக பயன்படுத்துவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கடலின் அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் சேவாவ்டாப்பில் துறைமுகத்தின் வாயிலில் இரண்டு டால்பின்கள் காவல்காரர்கள் போல செயல்பட்டு வருகின்றன என அமெரிக்க கடற்படை இன்ஸ்டியூட் தகவல் அளித்துள்ளது.

latest tamil news

உக்ரைன் கடற்படையில் இருந்து ரஷ்ய கடற்படையை தற்காத்துக்கொள்ள கடலில் உள்ள டால்பின்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய போர்க் கப்பல்களை காக்கவும் எதிரி நாட்டு போர்க்கப்பல் தங்கள் எல்லைக்குள் வந்தால் உடனடியாக தங்கள் எஜமானர்களிடம் சத்தமிட்டு அறிவிக்கவும் இந்த டால்பின்கள் பயன்படுகின்றன.
தங்களது பணியை இந்த டால்பின்கள் மிகத் துல்லியமாக செய்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இதுகுறித்த ஓர் புதிய ஆச்சரியமான தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த 1959 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை இதேபோல போர்க்கப்பல்களை காக்க டால்பின்களுக்கு பயிற்சி அளித்ததாக நியூஸ்வீக் இதழில் செய்தி ஒன்று கூறுகிறது. இதுவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.