Punjab Kings vs Lucknow Super Giants (PBKS vs LSG) Players List: 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்றிரவு நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அறிமுக அணியான லக்னோ நடப்பு தொடரில் நடந்த 8 ஆட்டங்களில் 5 வெற்றி 3 தோல்வி என பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ் நல்ல நிலையில் உள்ளனர். ரவி பிஷ்னாய் சுழலில் வித்தை காட்டி வருகிறார்.
இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் மயங்க் அகர்வால் மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வலுவான தொடக்கம் கிடைக்க அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அந்த அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டன் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல், பந்துவீச்சில் ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் பலம் சேர்க்கின்றனர்.
முந்தைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அதே உற்சாகத்தில் பஞ்சாப் அணி களமிறங்கும். அதேவேளையில், கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியான மும்பை இந்தியன்சை பதம் பார்த்த லக்னோ அணியும் அதே உத்வேகத்தில் களம் காணும். மொத்தத்தில், சரிசம பலத்துடன் உள்ள பஞ்சாப் – லக்னோ அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
Indian Premier League, 2022Maharashtra Cricket Association Stadium, Pune 29 April 2022
Punjab Kings
Lucknow Super Giants
Match Yet To Begin ( Day – Match 42 ) Match begins at 19:30 IST (14:00 GMT)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“