வறுமையில் தவித்து வந்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி. இவர் வயது மூப்பின் காரணமாக சற்றுமுன் காலமானதாக வெளியாகியுள்ள ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு
நடித்த கி.மு. என்ற படத்தில் இடம்பெற்ற ‘போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா’ என்ற காமெடி இடம் பெற்றிருக்கும். அந்த காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காமெடி காட்சியில் நடித்தவர் ரெங்கம்மாள் பாட்டி.

வரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் ஆகும். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார். இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கொடூர கொலைகள் செய்யும் ஆண்ட்ரியா: மிரட்டலாக வெளியான ‘பிசாசு 2’ பட டீசர்.!

ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குண சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர் இவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் காரணமாகவும் வயது முதிர்வாலும் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் பாட்டி இன்று காலமாகியுள்ளார்.

40 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து போதிலும் அவர் கடைசியில் ஒரு கூரை வீட்டில் தான் தங்கி இருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் உட்பட கைவினைப் பொருட்களை விற்று பிழைப்பை நடத்தி வந்தார். இந்நிலையில்
ரங்கம்மா பாட்டி
இன்று மதியம் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பட வசனத்தை மேடையில் பேசிய ஜீவா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.