வாலி இந்தி ரீமேக் விவகாரம்: போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடையாளத்தை பெற்றுத்தந்தது. கோலிவுட்டில் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்திருந்தார். அதன்படி, வாலி படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்கரவர்த்தி இடமிருந்து படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருந்தார் போனி கபூர்.

தொடர்புடைய செய்தி: எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே என்ன பிரச்னை? வாலி பட விவகாரத்தில் நடப்பதென்ன?

Flashback: How 'Thala' Ajith's career changed after Vaali

அதே நேரத்தில் அந்த திரைப்படத்தை இந்தி மொழியில் தானே இயக்க எஸ்.ஜே. சூர்யா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் `கதை எழுதியவருக்கே கதை சொந்தம் என்ற அடிப்படையில் வாலி திரைப்படத்தை போனிகபூர் ரீமேக் செய்யக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தி ரீமேக்கிற்கான வேலையை தொடங்க போனி கபூருக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்தது.

இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், `சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து திரைப்படத்திற்கான உரிமையை எஸ்.ஜே.சூர்யா கோர முடியும்’ என கருத்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்தி: இந்தி தேசிய மொழி அல்ல என கருத்து தெரிவித்த நடிகர் சுதீப் – ஆதரவு தெரிவித்த பாஜக முதல்வர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.