விப்ரோவுக்கு இவ்வளவு பிரச்சனையா.. மோசமான அட்ரிஷன்.. பலத்த தேவை.. எப்படி?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், பணியமர்த்தல் குறித்தான ஒரு முக்கிய அறிவிப்பினை கொடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் தேவையானது வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ஊழியர்கள் வெளியேறும் விகிதமானது அதிகரித்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் கடந்த 2021 – 22ல் ஊழியர்கள் வெளியேறும் விகிதமானது 23.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பற்றாக்குறை

இதற்கிடையில் திறமைகளுக்கான பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இதனை சமாளிக்க நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக சாப்ட்வேர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது. அதுமட்டும் அல்ல, பயிற்சி அளித்து அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலையும் அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஜூனியர் லெவலில் பதவி உயர்வு

ஜூனியர் லெவலில் பதவி உயர்வு

இது குறித்து விப்ரோவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் தியரி டெலாபோர்ட், ஜீனியர் லெவலில் உள்ள 70% ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது விப்ரோவின் மிகபெரிய நடவடிக்கை என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

 பிரெஷ்ஷர்கள்
 

பிரெஷ்ஷர்கள்

இது குறித்து விப்ரோவின் CHRO செளரப் கோவில், இந்த நடவடிக்கையானது விப்ரோவுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாங்கள் அதிகளவிலான பிரெஷ்ஷர்களை பணியமர்த்திய நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு ஒரு தெளிவான பாதையை வழங்கியுள்ளோம். அது அவர்களின் ஒப்பந்தம். அதனை எப்படி கையாள்வது என அவர்களுக்கு தெரியும்.

 சம்பள மாற்றம்

சம்பள மாற்றம்

மேலும் அவர்கள் பணியமர்த்தப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, அவர்கள் பணிக்கு வரும்போது வித்தியாசமான சம்பளத்தினை பெறுவதற்காக, அவர்களுடன், எங்களது பயிற்சியாளார்கள் இணைந்துள்ளனர்.

தேவை அதிகமுள்ள நேரத்தில் அட்ரிஷன் அதிகரிப்பு

தேவை அதிகமுள்ள நேரத்தில் அட்ரிஷன் அதிகரிப்பு

தொடர்ந்து நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது அதிகரித்து வருகின்றது. கடந்த நிதியாண்டில் 23.8% ஆக அதிகரித்துள்ளது. இது டிசம்பரில் 22.7% ஆகவும் இருந்தது. தற்போது ஐடி துறையில் வலுவான தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கான தேவையும் அதிகம் உள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 பணியமர்த்தல் திட்டம்

பணியமர்த்தல் திட்டம்

இதற்கிடையில் நிறுவனம் நடப்பு நிதியாண்டிலும் பிரெஷ்ஷர்களை இரு மடங்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 19000 பேரை பணியமர்த்திய நிலையில், நடப்பு ஆண்டில் 38000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 45,416 ஊழியர்களை பணியமர்த்தியது. இதற்கிடையில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது 2,43,128 பேராக அதிகரித்துள்ளது.

 அலுவலகம் வரலாமா?

அலுவலகம் வரலாமா?

அலுவலகம் எப்போது வரலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த தியரி, தற்போதைக்கு ஹைபிரிட் மாடலில் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். நாங்கள் ஊழியர்கள் அலுவலகம் வருவதை ஊக்குவிக்கிறோம். ஆனால் ஊழியர்களின் விருப்பத்தினையும் அங்கீகரிக்கிறோம், அவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பினால் அதனையும் அங்கீகரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: wipro விப்ரோ

English summary

wipro to encourage freshers every quarter to fight talent war

wipro to encourage freshers every quarter to fight talent war/விப்ரோவுக்கு இவ்வளவு பிரச்சனையா.. மோசமான அட்ரிஷன்.. பலத்த தேவை.. எப்படி?

Story first published: Friday, April 29, 2022, 21:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.