வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிலக்கரியை சரக்கு ரயில் மூலம் விரைவாக கொண்டு செல்வதற்காக, நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல மாநில அரசுகள் நிலக்கரி தேவை என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மத்திய மன்வாரிய ஆணையத்தின் தகவல்ப்படி, நாடு முழுவதும் உள்ள 165 அனல் மின் நிலையங்களில் 56 நிலையங்களில் 10 சதவீதத்திற்கு குறைவாகவும், 26 ரயில் நிலையங்களில் 5 சதவீதத்திற்கு குறைவாகவும் நிலக்கரி கையிருப்பு உள்ளது. டில்லியில் முக்கிய அனல் மின் நிலையத்தில் 21 நாட்களுக்கு கையிருப்பு வைத்திருக்க வேண்டிய நிலையில், ஒரு நாளைக்கும் தேவையான அளவை விட குறைவான அளவு நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருந்தார்.

இந்நிலையில், நிலக்கரி கொண்டு செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலக்கரியை கொண்டு செல்வதற்கு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்கான நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தற்காலிகமான நடவடிக்கை. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement