கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கெம்பகரை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரான தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த லாரன்ஸ், 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர் உறவினர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு சென்று, தலைமையாசிரியர் லாரன்ஸுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அவரது கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியதோடு, போலீசிலும் புகாரளித்துள்ளனர். போலீசார் பள்ளிக்கு வருவதற்குள்ளாக, அங்கிருந்து தனது காரில் தப்பிச் சென்ற லாரன்ஸ் தேனிக்கோட்டைக்கு சென்றிருக்கிறார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமையாசிரியர் லாரன்ஸ், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அவரை கைது செய்தனர்.