கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் அரசியல் ஆலோசனை குழு மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது கட்சியின் நிர்வாகிகள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் துரை வைகோ மதிமுக தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மதிமுகவில் துறை வைகோவிற்கு பதவி கொடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் இருந்து வந்த மூன்று மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அதன்படி சிவகங்கை செவந்தியப்பன், விருதுநகர் சண்முகசுந்தரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.