Elon Musk: சம்பளத்தில் கைவைத்த எலான் மஸ்க் – ட்விட்டரில் அதிரடி மாற்றங்கள்!

எலான் மஸ்க், சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் (44 பில்லியன் டாலர்) மதிப்பிலான
ட்விட்டர்
நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்ட வங்கிகளிடம், செலவை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, வாரிய இயக்குநர்களின் (Board Directors) சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், செலவினங்களை குறைத்து, ட்விட்டர் மூலம் வருவாயை ஈட்ட புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளுக்கு அளித்த உறுதிமொழியில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரை வாங்க முடிவெடுத்த பிறகு,
எலான் மஸ்க்
வங்கிகளிடம் சம்ர்பித்த தரவுகள் இந்த செய்தியை உறுதிபடுத்தி இருக்கிறது.

ட்விட்டருக்கு தான் விரும்பிய பணத்தைச் செலுத்த, வங்கிகள் உதவும் என நம்பிய மஸ்க், அதற்காக நிறுவனத்தின் வருவாய் மீதான நம்பிக்கையை தனது அறிக்கை மூலம் உணர்த்தினார். இறுதியில், அவர் ட்விட்டருக்காக $13 பில்லியன் கடன்களைப் பெற்றார்.

மேலும், அவரது டெஸ்லா பங்குடன் பிணைக்கப்பட்ட சொத்துகளுக்கு $12.5 பில்லியன் டாலர் கடனாக பெற்றார். மீதமுள்ள தொகையை தனது சொந்த பணத்தில் செலுத்த ஒப்புக்கொண்டார். இப்படியாக மஸ்க் தான் விரும்பிய நிறுவனத்தை ஏப்ரல் 25, 2022 அன்று தன் வசமாக்கினார்.

இனி சுதந்திரமாகப் பேசலாம் – ட்விட்டர் கடந்து வந்த பாதை!

ஊதிய குறைப்பு

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, எலான் மஸ்க் விரைவில் சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரியவந்துள்ளது. எனினும், அவர் நிறுவனத்தின் இதுபோன்ற செயல்பாடுகளில் தற்போது தலையிட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, மஸ்க் ட்விட்டரின் தலைவர் பொறுப்பை இதுவரை ஏற்கவில்லை. அவர் பொறுப்பேற்ற பின் தான், ட்விட்டரின் தலைமை நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, தலைவர் பதவியை ஏற்ற பின் தான் அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதாக, ட்விட்டரில் பணம் செலுத்த கிரிப்டோகரன்சியை மஸ்க் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரீமியம் சந்தாக்களை ஊக்குவிக்கும் திட்டங்களையும் அறிவிக்கபோவதாகக் கூறப்படுகிறது. தற்போது, ட்விட்டரின் பிரீமியம் ப்ளூ சேவையின் மாத சந்தா $2.99 அமெரிக்க டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Truth Social: வாய்ப்பில்ல ராஜா – ட்விட்டர் பக்கம் எல்லாம் இனி வர முடியாது!

வெளிப்படையானப் பேச்சு

ட்விட்டர் பயனர்கள் இனி சுதந்திரமாகப் பேசலாம் எனவும், அவை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். மேலும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ட்விட்டர் மெசேஜுகளுக்கு End to End Encryption அம்சம் கொடுக்கப்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ட்விட்டர் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனவும் எலான் மஸ்க் உறுதி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.