KGF: இன்ஜினீயரிங் மாணவி டு ராக்கி பாயின் காதலி; Srinidhi shetty -யின் திரைப்பயணம்|Photo Story

KGF பாகம் ஒன்று வெளியானபோது மிக குறைவாகவே அந்தப் படத்தில் இவருக்கு காட்சிகள் இருந்தபோதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

ஸ்ரீநிதி ஹீரோயினாக அறிமுகமானது KGF படத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே உலகம் முழுவதும் மாடலாக அறிமுகமாகிவிட்டார்.

1992 அக்டோபர் 21 கர்நாடகா மங்களூரில் பிறந்தார் ஸ்ரீநிதி. துளு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். Sri Narayana Guru English Medium School-ல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கிறார்.

பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டியில் Electrical and Electronics பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

கல்லூரி படிக்கும்போதே நிறைய மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்திலும் பணியில் இருந்துள்ளார்.. 2012 Clean & Clear Face போட்டியில் கலந்து கொண்டார்.

Miss Supranational India 2016 டைட்டிலுக்கு பிறகு லைம் லைட்டுக்கு வருகிறார் ஸ்ரீநிதி.

உலகளவிலான Miss Supranational 2016 போட்டியிலும் கலந்துகொண்டு வாகை சூடுகிறார். அதன் பிறகு உலகம் முழுவதும் மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்.

பொறியியல் பட்டதாரி என்ற போதும் இயல்பிலேயே மாடலிங், சினிமா துறை மீது ஆர்வம் கொண்டவர் ஸ்ரீநிதி.

துபாய், ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து, போலந்து என நாடு நாடாக சுற்றியவருக்கு KGF படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வருகிறது.

முதல் பாகத்தில் குறைவான காட்சிகளில் தோன்றியிருந்தாலும் நிறைவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் கதாபாத்திரத்துக்கு நிறைய காட்சிகள் இருந்தன.

KGF போன்ற வலுவான கதையில் நாயகனுக்கு முக்கியத்துவம் இருக்கும்போது தனது ஓவர்லோடட் அழகாலும், கச்சிதமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஸ்ரீநிதி.

விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார். மறுமுறை பார்க்கத் தோன்றும் அழகு, கனிவு, எதிர்வீட்டு பெண் தோற்றம் என ராக்கி பாயின் காதலி ரசிகர்களின் எப்போதைக்குமான பேவரைட்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.