Nayanthara:நயன்தாராவுக்கு வியாதியா?: ரசிகர்கள் கவலை

விக்னேஷ் சிவன்
இயக்கத்தில்
விஜய் சேதுபதி
,
நயன்தாரா
, சமந்தா உள்ளிட்டோர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நேற்று ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவின் நடிப்பை பாராட்டினார்கள்.

அதே சமயம் கதையை சொதப்பிவிட்டார் என்று விக்னேஷ் சிவனை விளாசினார்கள். படம் பார்த்தவர்களுக்கு நயன்தாரா எலும்பும், தோலுமாக இருந்தது தான் பெரிதாக தெரிந்தது.

நயன்தாராவை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. ஒல்லிக்குச்சியாக, வயதானவர் போன்று தெரிகிறார். அவருக்கு நல்லா சோறு போட்டு கொஞ்சம் வெயிட் போட வைக்கவும் விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நயன்தாரா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போவதை பார்த்து ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. உணவுக் கட்டுப்பாடால் ஒல்லியாகிறாரா, இல்லை உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உனக்கு நான் இருக்கேன், விக்கி முதுகில் தட்டிக் கொடுத்த நயன்: க்யூட் வீடியோ
இந்நிலையில் நயன்தாராவை பற்றி பெருமையாக பேசி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். நயன்தாரா தன் முதுகில் தட்டிக் கொடுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.