Poco M4 5G: புதிய போக்கோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

போக்கோ
நிறுவனம் புதிய Poco M4 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்தது. முன்னதாக நிறுவனம் இதன் புரோ மாடலை இந்திய பயனர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தது. தற்போது அதன் அடிப்படை மாடலை குறைந்த விலைக்கு அறிமுப்படுத்தி உள்ளது.

போக்கோ எம்4 5ஜி
ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட், இரண்டு லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது, சீனாவில் வெளியான Redmi Note 11E ஸ்மார்ட்போனின் மறுபதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கிரியேட்டர்கள் வாழ்வில் விளக்கேற்றிய இன்ஸ்டாகிராம்!

போக்கோ எம்4 5ஜி விலை (Poco M4 5g Price India)

கருப்பு, மஞ்சள், நீலம் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.12,499ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மே 5 ஆம் தேதி Flipkart தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சேவைக் கட்டணங்கள் இல்லாத சுலப மாதத் தவணை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் (Poco M4 5g Specs)

Poco M4 5G ஸ்மார்ட்போன் 6.58″ அங்குல முழு அளவு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதள அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 180Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவை பெற்றுள்ளது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 7nm
Mediatek Dimensity 700
5ஜி சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலி கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்டுக்கு கூடுதல் திறனை வழங்குகிறது. இதில் 4ஜிபி, 6ஜிபி ஆகிய இரண்டு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 128ஜிபி வரையுள்ள UFS2.2 மெமரி ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா (Poco M4 5g Camera)

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமராவும், கூடுதலாக 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் நிறுவப்பட்டுள்ளது. 5MP மெகாபிக்சல் கேமராவை செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

சும்மா… சும்மா ரீசார்ஜ் செய்ய வேண்டாம் – ஜியோவின் சூப்பர் திட்டங்கள்!

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்கும் 33W பாஸ்ட் சார்ஜரும் உடன் வழங்கப்படுகிறது. வைஃபை, ப்ளூடூத் 5.1, இன்பிராரெட் சென்சார், டைப்-சி, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 10T 5G, ரியல்மி 8 5G, போக்கோ எம்3 புரோ 5G, ஒப்போ A53s 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் போக்கோ எம்4 5ஜி போனுக்கு சந்தையில் போட்டியாக இருக்கும்.

Poco-M4-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Dimensity 700டிஸ்பிளே6.58 inches (16.71 cm)சேமிப்பகம்64 GBகேமரா50 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை12999ரேம்4 GBமுழு அம்சங்கள்
Poco-M4-5GPoco M4 5G 128 GB 6 GB

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.