Vijay:போட்ரா வெடிய: விஜய் ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்

வம்சி பைடிபல்லி இயக்கத்தில்
விஜய்
நடித்து வரும் படம்
தளபதி 66
. தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையான
ரஷ்மிகா மந்தனா
நடிக்கிறார்.

விஜய்க்கு அப்பாவாக சரத்குமாரும், அண்ணனாக ஷாமும் நடிக்கிறார்கள். விஜய் நடித்தாலும் தளபதி 66 படத்தை தன் ஸ்டைலில் எடுக்க விரும்புகிறார் வம்சி.

தளபதி 66 படத்தில் ஸ்டண்ட் காட்சிகளே இருக்காது என்று பேச்சு கிளம்பியது. படத்திற்கான அனைத்து ஆட்களையும் ஒப்பந்தம் செய்தபோதிலும் ஸ்டண்ட் மாஸ்டரை மட்டும் தேர்வு செய்யவே இல்லை. இதன் மூலம் விஜய் படத்தில் சண்டை காட்சியே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

மேலும் 90களில் பார்த்த விஜய்யை தளபதி 66 படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள். இந்த தகவல் தான் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அவர் படம் பற்றி புது தகவல்களை சொல்லச் சொல்ல எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையை அடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் சிட்டியில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

அடுத்த வாரம் 2வது கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. ஹைதராபாத்தை அடுத்து சென்னையில் தான் பெரும்பாலான காட்சிகளை படமாக்குகிறார்கள்.

Vijay:விஜய்க்கு ரொம்ப பெரிய மனசு: குவியும் பாராட்டு
இதற்காக சென்னையில் இருக்கும் ஸ்டுடியோ ஒன்றில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் தான் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தார்கள். ஆனால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தால் தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் சென்னையில் நடத்துங்கள் என்று விஜய் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்தே சென்னையில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.