உக்ரைனில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறைக்கு அதிகபட்சம் 2 வாரத்திற்குள் அரசாங்கம் தீர்க்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் அந்நாட்டில் கடும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது மட்டுமின்றி பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்ப நீண்ட தூரத்திற்கு வரிசையாக பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.
உக்ரைனிலிருந்து பல லட்சம் டன் உணவுப் பொருட்கள் மாயம்… அம்பலமான ரஷ்யா
இந்நிலையில், ரஷ்யர்கள் வேண்டுமென்றே எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் சேமிப்பு உள்கட்டமைப்பை அழித்து வருவதாகவும், துறைமுகங்களைத் தடுப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.
பற்றாக்குறையை நிரப்ப உடனடி தீர்வுகள் எதுவும் இல்லை. ஆனால் அரசாங்க அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள், அதிகபட்சம் இரண்டு வாரத்திற்குள் உக்ரைனுக்கு எரிபொருள் விநியோக அமைப்பு வழங்கப்படும், அதன் மூலம் பற்றாக்குறையைத் தடுக்க முடியும்.
மத்திய உக்ரைனில் உள்ள கிரெமென்சுக்கில் இந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு இது ஒரு கடினமான பணி என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
அதேசமயம், ஐரோப்பிய எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகக் உக்ரேனிய பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.