ரிலையன்ஸ், அதானி குழுமத்திற்கு அடுத்தபடியான இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா, தற்போது இரண்டு முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இவ்விரு திட்டத்தின் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்தமாக மாற உள்ளதால், டாடா குழுமம் மிகப்பெரிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு திட்டத்தின் மூளை-யாக விளங்குவது டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக விளங்கும் என்.சந்திரசேகரன் தான்.
ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..!
டாடா குழுமம்
காபி- முதல் -கார் வரையில் பல துறையில் இயங்கி வரும் டாடா குழுமம் சமீபத்தில் தனது லாபம் இல்லாமல் உலக நாடுகளில் இயங்கி வரும் வர்த்தகத்தை விற்று விட்டு முதலீட்டு அனைத்தையும் இந்தியாவிற்குத் திருப்பி இந்திய வர்த்தகத்தில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இது டாடா குழுமத்தில் மிக முக்கிய மற்றும் அதிரடியான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய உற்பத்தி துறை
இந்நிலையில் இந்திய உற்பத்தி துறையில் முக்கியமானதாக விளங்கும் இரு முக்கியத் திட்டத்தில் தான் தற்போது அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. ஒன்று செமிகண்டக்டர் சிப் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி.
சிப் தயாரிப்பு
உலகம் முழுவதும் சிப் தட்டுப்பாட்டால் தவித்து வரும் நிலையில் உடனடியாக உற்பத்தியை அதிகரிக்க முடியாத நெருக்கடி இத்துறையில் இருக்கும் காரணத்தால் அனைத்து உற்பத்தி துறையும் சிப்-களுக்கு வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமே நம்பி இயங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
டாடா OSAT
இந்தப் பிரச்சனையை உணர்ந்த டாடா ஏற்கனவே OSAT பிரிவில் வர்த்தகத்தைத் துவங்குவதற்கான பணிகளைத் துவங்கி வேகமாக இயங்கி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் வேகமாக வளரும் மற்றொரு துறையில் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் இறங்க உள்ளது.
EV பேட்டரி
எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் பேட்டரிகளை இந்தியாவிலேயே தயாரிக்க டாடா குழும் திட்டமிட்டுள்ளது என்று டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் என். சந்திரசேகரன் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ்
இதற்காக டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் செல் மற்றும் பேட்டரி உற்பத்திக்கான கூட்டணி நிறுவனங்களைத் தேர்வு செய்து வருகிறது. இந்திய எலக்ட்ரிக் கார் விற்பனையில் 70 சதவீதம் டாடா மோட்டார்ஸ் கையில் உள்ளது. இந்த அளவீட்டைத் தொடர்ந்து கட்டுப்படுத்த இத்தகைய உற்பத்தி திட்டங்கள் டாடா குழுமத்திற்குக் கட்டாயம் தேவை.
டாடா குழுமத்தின் இவ்விரு திட்டத்தின் மதிப்பு மட்டும் 103 பில்லியன் டாலர் ஆதாவது 76000 கோடி ரூபாயாக உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மாபெரும் உற்பத்தி திட்டமான ஆத்மாநிர்பர் திட்டத்தின் இணங்க டாடா குழுமத்தின் இவ்விரு திட்டமும் இயங்கி வருகிறது. மேலும் மத்திய அரசு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க PLI திட்டத்தையும் அறிவித்துள்ளது.
Tata group plan bigger with Modi govt atmanirbhar plan: $103bn plan with chip, EV battery manufacturing
Tata group plan bigger with Modi govt atmanirbhar plan: $103bn plan with chip, EV battery Manufacturing ஆத்மாநிர்பர்-ஐ கையில் எடுக்கும் சந்திரசேகரன்.. டாடா வேற லெவல் திட்டம்..!